சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள் கவிதை
கார்முகிலும் மழைச் சொரிந்திட காடெல்லாம் வளம் பெருகிட!! மருத்துவத்தில் தலை சிறந்திட !!
மல்லெடுத்த பாரதம் விளங்கிட!! பசிபட்டினி நிலை நீங்கிட !!
பள்ளி எங்கும் பறந்து விரிந்திட!!
ஏழ்மை இல்லாத நிலை பிறந்திட!!
ஏற்றமிகு இளைஞர்கள் கை ஓங்கிட!!
கல்வியில் சிறந்து விளங்கிட!!
கலைகளில் தலை சிறந்திட!!
நூலகங்கள் பல திறந்திட!!
நுட்பமிகு அறிவியல் ஆய்வுகள் செய்திட!!
பெண்மையில் தாய்மை கண்டிட பெண்கள் புகழ்கள் பல பெற்றிட சாலை விபத்து இல்லாது இருந்திட சக மனிதரும் சரித்திரம் படைத்திட!!
தொழில்துறையில் பல புரட்சிகள் செய்திட!! தொன்மையான கலைகள் போற்றிட!!
பெண்களின் நெற்றியில் செந்தூர திலகம் நிலைத்திட பேனாவின் முனையை விட!! கூர்மையான சமூதாயம் அமைந்திட!!
ஊழல் அற்ற நிலை நிலைத்திட!!
உண்மை குறள் ஓங்கிட!!
இவையாவும் பெற்று திகழ்ந்திட இந்தியா வளம் பெற வேண்டும்.
-வை. மாதேஸ்வரன்

Comments
Post a Comment